search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர் ஜெயந்தி"

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர பொருளாளர் வேலுச்சாமி, அவை தலைவர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணகுமார், பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, தலைமை பேச்சாளர் ராமசுப்பிர மணியன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் நிவாஸ், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், வெள்ளி முருகன், குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பசும் பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா நாட்டார்கள், சமுதாய தலைவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் முன்னி லையில் தலைவர் கரு.சுப்பி ரமணியன் தேவரின் திருவு ருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் நாட்டார் கள், சமுதாய தலைவர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இவ்வி ழாவில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஆயி ரக்கணக்கானோருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடங்களில் உள்ள தேவர் சிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, கீரைத்துறை பாண்டியன், அன்ன முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலா இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.


    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


    பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.

    சென்னை:

    தமிழக தனியார் பள்ளி ஆசிரியர் பெற்றோர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    தேசியம் என் உடல், தெய்வீகம் என் உயிர் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பள்ளிகளில் அவருடைய தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும். அந்த வகையில் தேவர் ஜெயந்தியை தமிழக மாணவர் ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம் என அறிவித்து புகை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. தனிமனித ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் வாழ்வியல் முறைகளிலும் இலக்கணமாக வாழ்ந்த சிறந்த சிந்தனையாளர். வளரும் தலைமுறையை வழிநடத்த அரசு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
    • போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றன.

    மதுரை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் பயணிப்பவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதனை கண்காணிக்கும் வகையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார், சாலைகளில் அதிநவீன கருவிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுதவிர பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.

    இதற்கிடையே மதுரை புறநகரில் உள்ள சுற்றுவட்ட சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கான பணிகளில் சிலைமான், கருப்பாயூரரணி ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதன்படி மதுரை மாநகரில் 257 வாகனங்களும், புறநகரில் 72 வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
    • அப்போது பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு அ.தி.மு.க. சார்பில்தான் வெள்ளிக்கவசம் வழங்கினேன் என்றார்.

    ராமநாதபுரம்:

    முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமீபத்தில் தேவர் தங்ககசம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுக சார்பிலேயே வெள்ளிக்கவசத்தை வழங்கி உள்ளேன். வெள்ளிக்கவசம் 10.4 கிலோ எடை கொண்டது.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார்.

    • தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    மதுரை:

    முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், பல்வேறு கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பேர் வருகை தர உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
    • இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் வருகிற 30-ந் தேதி சுதந்திர போராட்டத் தியாகி, முன்னாள் எம்.பி. முத்துராமலிங்கதேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன்னில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    முதல்-அமைச்சர் வரும் வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வரும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு தடுப்புகள், கமுதி மற்றும் பசும்பொன் பகுதிகளில் 92 நிரந்தர கண்காணிப்பு காமிராக்கள், தற்காலிக சோதனை சாவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் காந்தி மீனாள், பழனி, தங்கவேல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பாலாஜி உட்பட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வெளி மாவட்ட வாகனங்கள் பசும்பொன் வந்து செல்லும் வழித்தடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தேவர் ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் பசும்பொன் வந்து செல்லும் வழித்தடங்கள், தடை செய்யப்பட்ட வழித் தடங்கள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மண்டல வாகனங்கள்: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.

    வடக்கு மண்டல வாகனங்கள்: சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளுர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    மேற்கு மண்டல வாகனங்கள்: கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    தூத்துக்குடி, திருநெ ல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும் அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வருமாறு:

    ராமேசுவரம்- பட்டினம்காத்தான்-இ.சி.ஆர்.பேராவூர் சந்திப்பு -பைபாஸ் ரோடு- அச்சுந்த ன்வயல்-சத்திரக்குடி-பரமக்குடி-கமுதக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    தேவிபட்டினம்-கோப்பேரிமடம்-பேராவூர் சந்திப்பு-பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல்-சத்திரக்குடி-பரமக்குடி-பார்த்திபனூர்- அபிராமம்-பசும்பொன்.

    கீழக்கரை-பட்டி னம்காத்தான் இ.சி.ஆர்- பேராவூர் சந்திப்பு-பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் -சத்திரக்குடி-பரமக்குடி-கமுதக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன். சிக்கல்-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். கன்னி ராஜபுரம்-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன்.

    செவல்பட்டி-சாயல்குடி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். கடலாடி-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். காத்தாகுளம் மற்றும் எம்.சாலை-துளுக்கன்குறிச்சி, கடம்பன்குளம், மறவர் தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி-பசும்பொன். பொசுக்குடி-வெங்கலக்குறிச்சி-வெண்ணீர் வாய்க்கால்-முதுகுளத்தூர்-பேரையூர்- கமுதி-பசும்பொன்.

    இளஞ்செம்பூர்-முனியன்கோவில் விலக்கு-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். காக்கூர் மற்றும் புளியங்குடி-கீழப்பனையடியேந்தல்-வெண்ணீர் வாய்க்கால்-முதுகுளத்தூர்-பேரையூர்-கமுதி-பசும்பொன். மேலத்தூவல்-ஆனைசேரி-அபிராமம்-பசும்பொன். முஷ்டக்குறிச்சி-கமுதி-பசும்பொன்.

    க.விலக்கு, கிளா மரத்து ப்பட்டி-கமுதி-பசும்பொன். மண்டலமாணிக்கம்-கமுதி-பசும்பொன். பெருநாழி-கோவிலாங்குளம்-கமுதி-பசும்பொன். நயினார்கோவில்-எமனேஸ்வரம்-பரமக்குடி-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன். ஆர். எஸ். மங்களம்-சி. கே. மங்களம்-சருகனி-காளையார்கோவில்-சிவகங்கை-மானாமதுரை-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    திருப்பாலைக்குடி, தொண்டி மற்றும் எஸ். பி. பட்டினம்-திருவாடானை-சி.கே.மங்கலம்-சருகனி-காளையார்கோவில்-சிவகங்கை-மானாமதுரை-பார்த்திபனூர்-அபிராமம்-பசும்பொன்.

    ராமநாதபுரம் மாவட்ட த்திற்குள் தடைசெய்யப்பட்ட வழித் தடங்கள் வருமாறு:-

    ஆ.புதூர் (விருதுநகர் மாவட்டம்)-மண்டலமாணிக்கம் முதுகுளத்தூர்-தேரிருவேலி (வழி : கிழக்கு தெரு, தேவர்புரம், காக்கூர் ஆர்ச்) கீழத்தூவல்-வெண்ணீர்வாய்க்கால் (கீழத்தூவல் வாகனங்களை தவிர) பார்த்திபனூர் சந்திப்பு (என்.ஹெச்)-அழகன்பச்சேரி மேலக்கொடுமலூர் விலக்கு-மேலக்கொடுமலூர் முதுகுளத்தூர்-அபிராமம் (வழி : நல்லூர், மணிப்புரம், ஆரபத்தி) வெங்கார் சந்திப்பு-வெங்கார்.

    பரமக்குடி 5 முனை சந்திப்பு-கீழத்தூவல் (வழி : பொன்னையாபுரம், பாம்பூர்) காந்தி நகர்-எமனேசுவரம் (இளையான்குடி சாலை) ஆர்.எஸ்.மங்கலம்-தேவிபட்டினம் (என்.எச்.210) தொண்டி-தேவிபட்டினம் (இ.சி.ஆர்.)

    இதம்பாடல்-உத்திரகோசமங்கை சந்திப்பு (வழி: உத்திரகோசமங்கை, நல்லாங்குடி)

    கீழக்கரை-சிக்கல் (வழி: புல்லந்தை, ஏர்வாடி, இதம்பாடல்) சிக்கல்-இளஞ்செம்பூர் (வழி : கீரந்தை) கடலாடி-மலட்டாறு சந்திப்பு. ராமநாதபுரம் நகர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் எஸ்.பி. ஜவகரிடம் மனு அளித்தார்.
    • குருபூஜை விழா பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் மற்றும் கட்சியினர் நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா, அக்டோபர் 24ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது.

    முக்குலத்து புலிகள் கட்சியினர் வருடாவருடம் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ, மற்றும் எஸ்.பி ஜவகரிடம் மனு அளித்தனர்.

    கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தேவர் அக்டோபர் 30 மற்றும் 24ம் தேதிகளில் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ×